தைராய்டு என்றால் என்ன? தைராய்டு மற்றும் ஹைப்பர் தைராய்டு? Part - 1

Food 'DO' Healthy

தைராய்டு

·         தைராய்டு சுரப்பி என்பது உடலில் காணப்படும் உட்புற சுரப்பிகளில் ஒன்று.

·         இது கழுத்தை சுற்றி பட்டாம்பூச்சி வடிவத்தில் இருக்கும் ஒரு நாளமில்லா சுரப்பி ஆகும்.

·         இது தைராக்சின் எனும் ஹார்மோனை சுரக்கிறது தைராக்சின் ஹார்மோன் உடலின் வளர்சிதை மாற்றத்தில் முக்கியப் பங்கு கொள்ளக் கூடியது மேலும் தைராய்டு சுரப்பி உடலில் உள்ள செல்களை கட்டுப்படுத்துகிறது.

 

தைராய்டு என்றால் என்ன?

·         உடலில் அயோடின் குறைபாடு காரணமாக தைராய்டு சுரப்பிகளில் ஏற்படும் நோய் தைராய்டு ஆகும்.

·         இந்நோய்க்கு முக்கிய காரணமாக அயோடின் குறைபாடு அமைகிறது இது தைராய்டு சுரப்பியின் காரணமாக தொண்டையில் ஏற்படும் நோயாகும்.

·         இந்நோயின் சிக்கல் அதிகரிக்கும்போது தொண்டையின் முன்பகுதியில் ஒரு வட்ட வடிவமான கட்டி போல காட்சியளிக்கிறது. இது கழுத்து பகுதியில் என்டோகிரைன் சுரப்பிகளில் ஏற்படும் பிரச்சனை ஆகும்





தைராய்டு நோய் இரண்டு வகைப்படும்

தைராய்டு சுரப்பியானது அளவுக்கு அதிகமாகவோ அல்லது அளவுக்கு குறைவாகவோ ஹார்மோன்களை சுரப்பதால் பொறுத்து ஹைப்போ தைராய்டு மற்றும் ஹைப்பர் தைராய்டு என இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம்.

ஹைப்பர் தைராய்டு

ஹைப்பர் தைராய்டு என்பது தைராய்டு சுரப்பி அதிகமாக சுரப்பதால் ஏற்படும் பிரச்சனை ஆகும்.

ஹைப்போ தைராய்டு

ஹைப்போ தைராய்டு என்பது தைராய்டு சுரப்பி குறைவாக சுரப்பதால் ஏற்படும் பிரச்சனை ஆகும்.

 

தைராய்டின் அறிகுறிகள்

  • ·         உடல் எடை திடீரென அதிகரிப்பது தைராய்டின் அறிகுறியாகும்
  • ·         உடல் சோர்வும் தைராய்டின் அறிகுறி முக்கிய பங்காகும்
  • ·         கழுத்துப் பகுதியில் ஏற்படும் வீக்கமும் தைராய்டின் காரணமாகும்
  • ·         மலச்சிக்கல் பிரச்சனை
  • ·         முடி உதிர்வு
  • ·         முக்கியமாக பெண்களுக்கு தைராய்டு பிரச்சனை இருக்கும் பட்சத்தில் அது தைராய்டு சுரப்பியை அதிகமாக உற்பத்தி செய்து மாதவிடாய் காலத்தில் பிரச்சினையை ஏற்படுத்தும்

 

தைராய்டை கட்டுப்படுத்த எளிமையான வழிகளில் ஒன்று

மல்லி

·         இதற்கு நாம் நாட்டு மல்லியை உபயோகப்படுத்த வேண்டும்

·         முதலில் மல்லிகை மிதமாக அரைத்துக் கொள்ளவேண்டும். பின்பு ஒரு குடுவையில் சிறிதளவு தண்ணீர் எடுத்து அதில் அரைத்த மல்லியில் 4 ஸ்பூன் போட்டு நன்கு கொதிக்க வைக்க வேண்டும். பின்பு அதனை வடிகட்டி தேவையான அளவு நாட்டுச் சர்க்கரை சேர்த்து குடிக்க வேண்டும்.இது தைராய்டு பிரச்சனைக்கு சிறந்த மருந்தாக பழங்காலங்களில் உபயோகப்படுத்தப்பட்ட தாகும்.

 

தைராய்டு பிரச்சனைக்கு தவிர்க்க வேண்டிய உணவுகள்

  • ·         முட்டைக்கோஸ்
  • ·         காலிஃப்ளவர்
  • ·         பிரக்கோலி
  • ·         புளோரின் மற்றும் குளோரின் நிறைந்த தண்ணீரை குடிப்பது தைராய்டு பிரச்சினைக்கு காரணம் ஆகும்.
  • ·         கோதுமை மற்றும் மைதா போன்ற உணவுகளை சாப்பிடக் கூடாது. ஏனெனில் இதில் gluten கண்டெண்ட் அதிகம் இருக்கும்.
  • ·         வெள்ளைச் சீனியும் தைராய்டுக்கு ஒரு முக்கிய காரணமாகும். இதில் உள்ள வேதிப்பொருள் தைராய்டு சுரப்பியை ஒழுங்காக வேலை செய்ய விடாமல் தடுக்கிறது எனவே தைராய்டு வர காரணமாகிறது

 If you have any doubts about thyroid, please leave your comments in the comment box?


Post a Comment

0 Comments