![]() |
·
நாம்
சாப்பிடும் உணவை
செரிமானம் செய்வதற்கு கிராம்பு
ரெம்ப உதவிய இருக்கும் நாம் கடினமான
உணவை உண்ணும்போது கூட இது எளிமையாக செரிமானம்
செய்துவிடும்.
·
மேலும்
வயிற்றை சுத்தம் செய்ய உதவுகிறது
அதனாலே அசைவ உணவுகளில் கிராம்பு
சேர்க்க படுகிறது. இதற்கு வாசனை தர
கூடிய குணமும் இருக்கிறது எனவே
உணவு பொருட்களில் கிராம்பு சேர்த்துக்கொள்ளப்படுகிறது.
·
இத்தகைய
கிராம்பை நீரில் கொதிக்க வைத்து
அந்த நீரை குடிப்பதனால் உண்டாகும்
நன்மைகளை பார்க்கலாம்.
கிராம்பு
நீர்
செய்முறை:
·
ஒரு
பாத்திரத்தில் ஒரு குடுவை அளவு
தண்ணீரை எடுத்து அதில் 4 கிராம்பை
நன்கு நசுக்கிப்போட்டு நன்கு கொதிக்கவிட வேண்டும்.
நன்கு கொதிக்கவும் தண்ணீரின் நிறம் இளம் மஞ்சள்
நிறத்தில் மாறும் அதுவரை கொதிக்க
விடவேண்டும். பின்பு அதை வடிகட்டி
மிதமான சூட்டில் குடிக்கவேண்டும். இதனுடன் எதையும் சேர்க்கத்தேவையில்லை
·
காலை
உணவு அருந்திய பின்பு 30 நிமிடம்
கழித்து குடிக்கலாம். இதனை வாரத்தில் 3 நாட்கள்
குடித்தால் கூட போதுமானது.
பலன்கள்:
·
சளி
இருமல் ஜலதோஷம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு
சிலநேரங்களுக்கு தலைவலியும் வரக்கூடும் அப்படி தலைவலியால் பாதிக்கப்பட்டவர்கள்
இந்த கிராம்புநீரை குடிக்கலாம்.
·
உயர்
இரத்தஅழுத்த பிரச்சனை மற்றும் சீரற்ற இரத்த
ஓட்ட பிரச்சனை இருப்பவர்களுக்கு இந்த கிராம்பு நீர்
மிகவும் நல்லது
·
இதயத்தில்
சிறிய பாதிப்பு வந்தவர்கள் குடித்தால் நல்ல பலன் கிடைக்கும்
·
சிலருக்கு
செரிமான பிரச்சனை இருக்கும் அவர்களுக்கு இந்த கிராம்பு நீர்
மிகவும் நல்லது அந்த செரிமான
பிரச்னையை குணப்படுத்தும் தன்மை கொண்டது இந்த
கிராம்பு.
·
பற்களின்
ஆரோக்கியத்திற்கு இந்த கிராம்பு பெரிதும்
உதவுகிறது. பல்வலி உள்ளவர்கள் இந்த
கிராம்பை எடுத்து பல் இடுக்கில்
வைத்தால் போதும் வலி சிறிதுநேரத்தில்
குணமாகும்.
·
மேலும்
கல்லிரலை பலமாக்கவும் கணையம் நன்கு செயல்படவும்
இது உதவுகிறது.
·
உடல்
சோம்பலை போக்கி சுறுசுறுப்பாக வைக்கிறது.
·
இரத்தத்தில்
வெள்ளையணுக்கள் உற்பத்தியை அதிகரித்து உடலின் நோய் எதிர்ப்பு
சக்தியை அதிகரிக்கும். தொற்று கிருமிகள் ஏதும்
பாதிக்காத அளவுக்கு நமது உடலை பாதுகாக்கும்.
·
கிராம்பில்
உள்ள வேதிப்பொருட்கள் புற்றுநோயில் இருந்து பாதுகாப்பதாக பல
ஆய்வுகள் கூறுகின்றன.
கிராம்பை அளவுக்கு
அதிகமா
உபயோகிப்பதால்
வரும்
விளைவுகள்?
·
அளவுக்கு
அதிகமானால் அமிர்தமும் நஞ்சு அதுபோலவே கிராம்பை
அளவோட பயன்படுத்த வேண்டும். இல்லையென்றால் குமட்டல், வாந்தி, சுவாச பிரச்சனை,
தொண்டைகளில் புண் போன்றவை ஏற்பட
வாய்ப்புள்ளது.
·
இன்னும்
சிலபேருக்கு அலர்ஜி வரவும் வாய்ப்புள்ளது.
அரிப்பு, வீக்கம், தொண்டை கரகரப்பு போன்ற
பிரச்சனைகளும் வர வாய்ப்புள்ளது.
கிராம்பை யாரெல்லாம்
உபயோகிக்க
கூடாது?
·
அறுவை
சிகிச்சை மேற்கொள்ள போறவுங்க கிராம்பை சாப்பிடக்கூடாது, மேலும் இரத்தத்தில் சர்க்கரை
அளவு குறைவாக இருக்கவுங்க கிராம்பை
சாப்பிடக்கூடாது ஏனென்றால் இது அந்த சர்க்கரை
அளவை மேலும் குறைத்து விடும்
பின்பு மயக்கம் போன்றவை வரக்கூடும்.



0 Comments