மிளகின் பயன்கள் மற்றும் மருத்துவ குணங்கள்

 

மிளகு:

 

மிளகு மசாலாப் பொருட்களின் ராஜா என்றும் அழைக்கப்படுகிறது. இது எடை குறைக்க உதவுகிறது. இது செரிமானத்திற்கு நல்லது என்றும் உடலில் இருந்து நச்சு கூறுகளை அகற்றுவதன் மூலம் புற்றுநோயைத் தடுக்கிறது என்றும் கூறப்படுகிறது. மற்றும் அதிக மருத்துவ குணங்கள் கொண்டது. மருத்துவத் துறையில் மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படும் உணவுகளில் மிளகு ஒன்றாகும்..


 


பைப்பரின் (Piperine):

 

மிளகு பைபரின் என்ற வேதிப்பொருளைக் கொண்டுள்ளது. இந்த ரசாயனம் உடலில் பல நன்மைகளை  ஏற்படுத்தும் என்று தெரிகிறது. இது பாக்டீரியா, பூஞ்சை மற்றும் ஒட்டுண்ணிகளைக் கொல்லும் என்று தெரிகிறது. பைப்பரின்  புற்றுநோயிலிருந்து பாதுகாக்கவும் உதவக்கூடும்.

 

மிளகில் அடங்கியுள்ள சத்துக்கள்:


·         கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ் சத்துக்கள்

·         தையமின், ரிபோபிளேவின், நியாசின் முதலிய உயிர் சத்துக்கள்

 




மருத்துவ குறிப்புகள்:


(உணவுக்கு முன் எடுத்துக்கொள்ளுதல்)


·         பசியின்மை - தினசரி மிளகு பொடி 1/2 கிராம் வெதுவெதுப்பான நீரில் பருகிவர பசி உண்டாகும். உமிழ்நீரை பெருக்கி உணவை செரிக்க உதவும்.


· செரியாமை - மிளகு, சுக்கு, திப்பிலி, பெருஞ்சீரகம், இந்துப்பு ஆகியவற்றை சம அளவு பொடி செய்து, 1 கிராம் இருவேளை வெந்நீரில் எடுத்துவர செரியாமை நீங்கி, வயிற்று நோய்கள் நீங்கும்.


·   ஜலதோஷத்தால் வந்த இருமல் - மிளகு கஷாயத்தில் பனை சர்க்கரை சேர்த்து குடித்து வர வேண்டும்.


·         உடல் சூட்டினால் வரும் இருமல் - மிளகு பொடியை பனைவெல்லத்தில் சேர்த்து பிசைந்து, கண்மையளவு 2 () 3 நாட்கள் எடுக்க தீரும்.


·         உடல் நச்சுத்தன்மை நீங்க, விஷக்கடி நஞ்சுகள் நீங்க - மிளகு 10, வெற்றிலை 1, அருகம்புல் 1 கைப்பிடி - இடித்து போட்டு குடிநீரிட்டு குடித்து வரவும்.


·         பூரான் கடி - வெற்றிலை சாறு 180 மிலியுடன் மிளகு 35 கிராம் சேர்த்து 1 நாள் முழுவதும் ஊற வைத்து பின் ஊறிய மிளகை உலர்த்தி பொடி செய்து பீங்கான் பாத்திரத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். இந்தப் பொடியை இருவேளை 2 விரல் அளவு வெந்நீரில் எடுத்து வர பூரான் கடி விஷம் உடலில் நீங்கும். (பத்தியம்: உப்பு, புளி நீக்கல்)


·         மிளகு இரசம் - தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால் வயிற்று உபாதைகள், சுவாச நோய்கள் வராமல் இருக்கும். மூளையின் செயல்பாடுகள் அதிகரிக்கச் செய்யும்.


·         ஞாபகமறதி, உடல் சோம்பல், சளி தொந்தரவுகள் - மிளகு பொடியை தேனுடன் கலந்து இருவேளை எடுத்துவர ஞாபகமறதி, உடல் சோம்பல், சளி தொந்தரவுகள் நீங்கும்.

Post a Comment

0 Comments