நோய்எதிர்ப்புசக்தினா இதுதானா? அதனை அதிகரிக்கும் உணவுகள்:

Food 'DO' Healthy

நோய்எதிர்ப்புசக்தி:

 

  • பலவகையான பாக்டீரியாக்கள் நம்மை சுற்றி உள்ளன அவை நமது உடலுக்குள் நுழைய முயற்சி செய்யும் ஆனால் அவற்றை நமது உடலுக்குள் நுழைய விடாமல் தடுக்கும் சக்திதான் நோய்எதிர்ப்புசக்தி ஆகும்.
  • இதுமட்டுமின்றி நமது உடலுக்குள் சென்ற பாக்டீரியாக்களிடம் இருந்து நம்மை காப்பதும் இந்த நோய்எதிர்ப்புசக்தி ஆகும்.
  • இந்த நோய்எதிர்ப்புசக்தி குறையும் போது தன நோய்கள் நம்மை தாக்க முடியும்.


இயற்கையான நோய்எதிர்ப்புசக்தி

  • நமது உடலுக்கு  தோல் எப்படி ஒரு தடுப்புச்சுவர் போல செயல்படுகிறதோ அதுபோல தான் மூக்கு தொண்டை உணவுப்பாதை இவை அனைத்திலும் இருக்கும் ஜவ்வுகளும் ஒரு தடுப்பு கவசம் போல செயல்படுகிறது. இந்த கவசங்கள் தான் நம்மை நோய்கிருமிகளிடம் இருந்து நம்மை பாதுகாக்கிறது.
  • மேலும் நமது உடலுக்குள் செல்லக்கூடிய நோய்த்தொற்று கிருமிகளை தாக்கி அளிக்கக்கூடிய வெள்ளையணுக்கள். இவை தொடர்ந்து செயல்பட்டு கொண்டிருப்பவை இவைகளே நமது உடலின் இயற்கையான நோய்எதிர்ப்புசக்தி ஆகும்.

தகவமைக்கப்படும் நோய்எதிர்ப்புசக்தி:

  •  நமது உடல் நம்மை தாக்கும் பாக்க்டீரியாக்களிடம் இருந்து நம்மை காக்க அந்த பாக்க்டீரியாக்களுக்கு தகுந்த மாதிரி வேறுபட்ட நோய்எதிர்ப்புத்தன்மையை உருவாக்க கூடியது. இந்த நோய்எதிர்ப்புசக்தியில் முக்கிய பங்கு வகிப்பது ரத்தத்தில் உள்ள வெள்ளையணுக்களாகும்.

 

தற்காலிக நோய்எதிர்ப்புசக்தி:

  •  இவை நோய்க்கு தகுந்தாற் போல தற்காலிகமாக ஒரு நோய்எதிர்ப்புசக்தியை உருவாக்குபவை அல்லது எடுத்துக்கொள்பவை.
  • தாய்ப்பால் அருந்தும் குழந்தைக்கு தாய்ப்பாலில் இருந்து பெறப்படும் எதிர்ப்புசக்தி தற்காலிக எதிர்ப்புசக்திக்கு எடுத்துக்காட்டாகும்.
  • மேலும் நாம் எடுத்துக்கொள்ளும் மருந்துகளுமே தற்காலிக எதிர்ப்புசக்தி ஆகும்.

 

நோய்எதிர்ப்புசக்தி செயல்படும் முறை:

 

  • நமது உடலில் நோய்க்கிருமிகள் நுழையும் போது உடலில் உள்ள திசுக்கள், செல்கள், நுண்ணுயிரிகள் அனைத்தும் ஒன்றாக சேர்ந்து வேகமா செயல்படும். நாலாமில்லசுரப்பிகள், மண்ணீரல், மஜ்ஜை போன்றவையும் இந்த செயல்பாட்டில் முக்கிய பங்குவகிப்பதாகும்.
  • ரத்தத்தில் உள்ள வெள்ளையணுக்கள் இந்த செயல்பாட்டில் மிகப்பெரிய பங்கு வகிக்கின்றன.
  •  
  • உடலில் உள்ள வெவ்வேறு வகையான வேதிப்பொருள்களும், சுரப்பிகளும் நோய்எதிர்ப்புசக்தியை அதிகரிக்க பெரிதும் உதவுகிறது.

 

  • இவையனைத்தும் ரத்தம் மற்றும் நிணநீர் வழியாக பயணித்து நோய்க்கு காரணமான நோய்கிருமியை அளிக்க உதவுகிறது.
  •  
  • இந்த நோய்எதிர்ப்புசக்தி 24 மணிநேரமும் தொடர்ந்து செயல்படுகிறது மேலும் இதனுடைய பெரும்பாலான செயல்பாடுகள் நம்மைஅறியாமலே நடைபெறுகிறது.
  • சிலநேரங்களில் நோய்க்கிருமிகளை எதிர்க்க முடியாமல் நோய்எதிர்ப்புசக்தி தோல்வி அடையும் போது தான் அதனுடைய வெளிப்பாடு நமக்கு தெரிகிறது அதுவே நமக்கு வரக்கூடிய நோய்களாகும்.
  • இதன்வெளிப்பாடாகவே காய்ச்சல், சளி போன்றவை நமக்கு ஏற்படுகிறது. நோய்எதிர்ப்புசக்தி அந்த நோயை எதிர்த்து போராடும் போது உண்டாகும் வெப்பமே நமக்கு காய்ச்சலாக தெரிகிறது அதுவே நமது உடலின் வெப்பம் மாறுதலுக்காக காரணமாகும்.
  • சளியின் வழியாக நோய்க்கிருமிகள் வெளியேற்ற படுகிறது.
  • அடிபடும்போது ஏற்படும் புண், கட்டி போன்றவைகளின் பொது அந்த பகுதிகளில் நோய்எதிர்பதற்கான செல்கள் அதிகமாக குவிகிறது இவையெல்லாம் அந்த புண்ணின்வழியாக கிருமிகள் தொற்றுவதை தடுக்கிறது.
  • இவ்வளவு இருந்தும் நமது உடலில் நோய் ஏற்படுகிறது என்றால் அதற்கு காரணம் நமது உடலில் நோய்எதிர்ப்புசக்தி மிகவும் குறைவாகஉள்ளதே.

நோய்எதிர்ப்புசக்தி குறைய காரணங்கள்:

·         பலகீனமான உடலமைப்பு,

·         மனஅழுத்தத்தை குடுக்கக்கூடிய வேலைகள்,

·         அலர்ஜி ஏற்படுத்தக்கூடிய சூழ்நிலைகளில் வாழ்வது,

·         ஊட்டச்சத்து குறைபாடு,

·         மது, போதைப்பழக்கம், புகைப்பழக்கம், தூக்கமின்மை, சர்க்கரைநோய் இவைஅனைத்து நமது உடலின் நோய்எதிர்ப்புஆற்றலை குறைத்து நமக்கு நோய்வர காரணமாக அமைகின்றன.

 

நோய்எதிர்ப்புசக்தி அதிகரிக்க எடுத்துக்கொள்ளவேண்டிய உணவுகள்:

 

பேரிச்சம்பழம்:

  • இதில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. தேனில் ஊறவைத்த பேரீச்சம்பழத்தை தினமும் சாப்பிடும் போது நமக்கு நோய்எதிர்ப்புசக்தி இயற்கையாகவே அதிகரிக்கிறது
  • இது ஆண்களுக்கு உண்டாகும் மலட்டுத்தன்மை போன்றநோய்யையும் சரிசெய்கிறது.

 

எலுமிச்சை:

  • இதில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இது நோய்எதிர்ப்புசக்திக்கு மிகமுக்கியமாக தேவைப்படுகிறது. வைட்டமின் சி குறையும்போதுதான் நோய்எதிர்ப்புசக்தியும் குறைய ஆரம்பிக்கும்
  • வைட்டமின் சி நிறைந்த உணவுகள் நோய்எதிர்ப்புசக்தியை நன்கு அதிகரிக்கும். எலுமிச்சை மற்றும் ஆரஞ்சு ஜூஸ் தினமும் எடுத்துக்கொள்வது நோய்எதிர்ப்புசக்தியை நன்கு அதிகரிக்கும்.

 

பூண்டு:

  • தலைவலி முதல் புற்றுநோய் வரை பலவிதமான நோய்களை குணமாக பூண்டு பயன்படுகிறது. இதில் உள்ள அல்லிசின் வைரஸ் மற்றும் பாக்டீரியாவை அளிக்கும் திறன்கொண்டது
  • இது ரத்தஓட்டத்தை அதிகரிக்கவும் ஹார்மோன்களை கட்டுப்படுத்தவும் உதவுகிறது. நோய்எதிர்ப்புசக்தியை அதிகரிக்க நன்கு உதவுகிறது.

மஞ்சள்:

  • இது இயற்கையாகவே நோய்எதிர்ப்புசக்தி கொண்ட உணவுப்பொருளாகும் இது அதிக மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. நோய்எதிர்ப்புசக்தியை அதிகரிப்பதில் மிகமுக்கியமான பொருள் மஞ்சளாகும்
  • இது ரத்தத்தை சுத்திகரிக்கக்கூடியது மேலும் காய்ச்சல், சளி, இருமல், போன்ற நோயில் இருந்து நம்மை காக்க கூடியது. பாலில் மஞ்சள், பனங்கற்கண்டு சேர்த்து குடித்துவந்தால் உடலில் நோய்எதிர்ப்புசக்தி நன்கு பெருகும்.

முட்டை:

  • வைட்டமின் டி அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக்கொளவதன் மூலம் நோய்எதிர்ப்புசக்தியை அதிகரிக்க முடியும். வைட்டமின் டி அதிகம் உள்ள உணவுகளில் மிகமுக்கியமானது முட்டை.
  • தினமும் காலையில் சூரிய ஒளியில் நிற்பதன் மூலமாகவும் வைட்டமின் டி இயற்கையாக பெற முடியும்.
  • வைட்டமின் டி எலும்புகளின் உறுதிக்கு மிகவும் அவசியமான ஒன்று.
  • முட்டையில் அதிக அளவு புரதம் மற்றும் கொழுப்பு அடங்கி உள்ளது இது நமது திசுக்களை சீரமைக்கிறது மேலும் உறுப்புகளின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது.
  • எலும்புகள் மற்றும் பற்களை உறுதியாக வைக்க முட்டை பெரிதும் உதவுகிறது. முட்டையை அவித்து சாப்பிடுவது பெரிதும் நல்லது. முட்டையை சாப்பிடுவதனால் உடலின் நோய்எதிர்ப்புசக்தி பெரிதும் அதிகரிக்கிறது.


Post a Comment

0 Comments