கால்சியம் சத்து நிறைந்த உணவுகள்:
நம்
உடலுக்கு கால்சியம் சத்து மிகவும் முக்கியமானது
என்பது நாம் அனைவருக்கும் தெரியும்.
நாம் சாப்பிடும் தினசரி உணவில் கால்சியம்
சத்து நிறைந்த உணவுப்பொருட்களை
உண்பது மிக அவசியம்.
மாத்திரைகளை விட உணவுப்பொருள்களின் மூலம்
உடலில் கால்சியம் சத்தை அதிகரிப்பது உடலுக்கு
மிகுந்த பலனளிக்கும். சராசரியாக, ஒருவர் ஒரு நாளைக்கு
1300 மி.கி கால்சியம் உட்கொள்ள
வேண்டும் என்பது ஆராய்ச்சிபூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
கால்சியம்
உள்ள உணவுகளை மட்டும் சாப்பிட்டால்,
அனைத்தும் சரியாகிவிடாது. கால்சியத்தை நம் உடலால் தானாக
உறிஞ்ச முடியாது அதற்கு வைட்டமின்
டி சத்து தேவை அது
கால்சியம் உறிஞ்சுதலை எளிதாக்குகிறது.
எனவே
கால்சியம் உள்ள உணவுகளை சாப்பிட்டால்,
கால்சியத்தை உடல் உறிஞ்சுவதற்கு
வைட்டமின் டி சத்தும் மிகவும்
அவசியமாகிறது. எனவே கால்சியத்துடன் சேர்த்து
வைட்டமின் டி உள்ள உணவுகளை
சாப்பிட வேண்டும்.
கால்சியம்
சத்து குறைபாடு இருந்தால், எலும்புகள் வலுவின்றி இருப்பதோடு, இரத்த செல்கள் உருவாவதிலும்
பிரச்சனைகள் ஏற்படும். இன்றைய காலத்தில் நிறைய
பேர் இளைஞர்கள் உட்பட நிறைய பேர்
மூட்டு வலியால் அவதிப்படுவதை பார்த்து
இருப்போம் இதற்கு காரணம் உடலில்
கால்சியம் சத்தானது மிகவும் குறைவாக இருப்பதால்
தான். மேலும் கால்சியம் அதிகம்
உள்ள உணவுகளை சரியாக உட்கொள்ளததும்
ஒரு வகையில் காரணமாகிறது.
காய்கறிகளிலேயே ப்ரக்கோலிதான்
அதிக
கால்சியம்
சத்து
நிறைந்தது.
கால்சியம் சத்து அடங்கியுள்ள உணவுப்பொருட்களை பற்றிப்பார்ப்போம்:
1.
ப்ரோக்கோலி (Broccoli)
ப்ரோக்கோலியில் கால்சியம் சத்து அகிகமாக உள்ளது இதனை உணவில் சேர்த்துக்கொண்டால்
எலும்புகள் வலுப்படும். 100g புரோக்கோலியில்
47 மி.கி கால்சியம் உள்ளது.
மேலும் பொட்டாசியம், பொஸ்பரஸ்,
சோடியம், கரோடினாய்டு, வைட்டமின் சி, இ, கே, ஃபோலேட் ஆகியவையும் ப்ரோக்கோலியில் இருக்கின்றன.
ப்ரோக்கோலியின் இலைகளிலும், தண்டுகளிலும் அதிக அளவிலான பினாலிக்,
ஆன்டிஆக்ஸிடன்ட்மற்றும் புற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்கான
பல சத்துக்கள் அடங்கியுள்ளன.
2. பூண்டு (Garlic)
நிறைய மருத்துவ குணங்களை உள்ளடக்கிய ஓர் சிறப்பான உணவுப் பொருள் பூண்டு.
பூண்டில் கால்சியம், பொஸ்பரஸ், வைட்டமின் சி,
மெக்னீசியம், பொட்டாசியும், செலினியம், மற்றும் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கிறது.
100 கி பூண்டில் 181 மி.கி அளவு கால்சியம் சத்து அடங்கிஉள்ளது.
6 கி ப்ரோடீன் சத்தும் இதில்
அடங்கியுள்ளது.
தினமும் ஒரு பச்சை பூண்டை வெறும் வயிற்றில் காலையில் சாப்பிட்டு வந்தால்
உடலில் உள்ள கிருமிகள் அனைத்தும் வெளியேறி
உடல் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும். மேலும் பூண்டு வாயு தொல்லைக்கு மிக சிறந்த மருந்தாக
பயன்படுகிறது.
3. நட்ஸ் (Nuts)
100 கிராம் நட்ஸில் 80 - 200 மி.கி கால்சியம் சத்து நிறைந்துள்ளது. மேலும் 5 -
20 கிராம் கொழுப்புச்சத்தும் நிறைந்துள்ளன. மேலும் 5 - 20 கிராம் புரத சத்தும் நிறைந்துள்ளது. நட்ஸில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் இருப்பதால் இதய ஆரோக்கியத்துக்கு நல்லது. நட்ஸ் சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான எனர்ஜி அதிகமாக கிடைக்கிறது. நட்ஸின் தோல்களில் நார்ச்சத்து நிறைந்திருப்பதால் மலச்சிக்கல் பிரச்னை
ஏற்படாது. வைட்டமின் இ, வைட்டமின் பி, கரோட்டினாய்டு போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்டுகள் ஏராளமாக
இருப்பதால் பார்வை மற்றும் சருமப் பாதுகாப்புக்கு நல்லது.
4. மீன் (fish)
மீன் சாப்பிட்டால் உடலுக்கு அதிக அளவில் கால்சியம் சத்து கிடைக்கும்.
மேலும் மீனில் ஒமேகா 3 fatty acid உள்ளதால்
உடலுக்கு தேவையான அதிக அளவிலான சத்துக்கள் நமக்கு கிடைக்கின்றன. மீனில் புரதச்சத்து
நிறைந்துள்ளது.
குறிப்பாக சால்மன் மீன் விலை சற்று விலை அதிகமாக இருந்தாலும்
இந்த மீனில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளதால், இதனை அடிக்கடி உட்கொண்டு வர உடலின்
ஆரோக்கியம் மேம்படும். இம்மீனில் கால்சியம் சத்து அதிகமாக உள்ளது.
சால்மன் மீனில் உள்ள குறிப்பிட்ட
ஊட்டச்சத்துக்கள், எலும்புகளின் உறுதியை அதிகரிப்பதாக பல ஆய்வுகள் கூறுகின்றன. சால்மன் மீனில் உள்ள அதிகளவு ஓமேகா 3 மற்றும் பாதரசமானது
உடலினை வலிமையாக வைக்கிறது.
5. வாழைப் பழம் (Banana)
சராசரியாக கிடைக்கும் பழங்களில் மிகவும் முக்கியமானது வாழைப்பழம். இதனை
தினமும் ஒன்று சாப்பிட்டால் கூட உடலுக்கு நிறைய நன்மைகள் உண்டாகும். உடலில் உள்ள கழிவுகளை
நீக்க வாழைப்பழம் பெரிதும் உதவுகிறது. மலச்சிக்கலை போக்க பெரிதும் உதவுகிறது.
வாழைப்பழமானது மஞ்சள், பச்சை,
சிவப்பு, பழுப்பு நிறங்களில் காணப்படுகிறது. மேலும் பலவகையான வாழைப்பழங்கள் மரபணுமாற்றம்
செய்யப்பட்டு வருகின்றன அவைகள் உடலுக்கு தீங்கு விளைவிப்பவையே.
இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்தி,
சோர்வு, மலச்சிக்கல், மன அழுத்தம், நெஞ்செரிச்சல், வயிற்றுப்புண் ஆகியவற்றை போக்குகிறது.
இயற்கையான வாழைப்பழத்தில்
கால்சியம், பொட்டாஷியம், மக்னீஷியம், இரும்புச்சத்து, ட்ரிப்டோபான், வைட்டமின் பி6,
நார்ச்சத்து போன்ற சத்துக்கள் அதிகமாக இருக்கிறது.
வாழைப்பழத்தில் இரும்புச்சத்து
அதிகமாக இருப்பதால் உடலில் ஹீமோகுளோபின் அளவு அதிகரித்து இரத்த சோகையை போக்குகிறது.
0 Comments